இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் நடித்த ஜனனி, தற்போது ‘தொல்லைக்காட்சி’, ‘உல்டா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்கி வரும் ‘உல்டா’ சைக்காலஜிகல் த்ரில்லர் படமாம்! இந்த படத்தில் ஜனனி சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் முடிந்து விட்டதாம். அதைப் போல ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவியாளராக பணிபுரிந்த சாதிக் கான் இயக்கும் படமான ‘தொல்லைக்காட்சி’யின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இப்படத்தில் ஜனனியின் கேரக்டர் பெயர் மலர் என்பதாம்! இது குறித்து ஜனனி கூறும்போது, ‘‘இந்த படத்தில் முதன் முதலாக பாரம்பரியம் மிக்க ஒரு தமிழ் பெண்ணாக நடிக்கிறேன். என் கேரக்டர் பெயர் மலர். ‘பிரேமம்’ படத்தில் வந்த மலர் டீச்சர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். அதைப் போல இப்படத்தில் வரும் என் மலர் கேரக்டரும் அனைவரையும் வெகுவாக கவரும்’’ என்றார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...