இயக்குனர் அட்லி மற்றும் அவரது டீம் சமீபத்தில் ‘தெறி’யின் சிறப்புக் காட்சியைப் பார்த்தார்களாம். படம் முடிந்ததும் தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள் ஒரு சில முடிவுகளை எடுத்தார்களாம். அதாவது ‘தெறி’ படத்தின் முக்கிய காட்சிகள் நகரும் சமயத்தில் டி.ஆர். பாடிய ‘ராங்கு...’ பாடல் படத்தின் வேகத்தை குறைப்பதுபோல் இருப்பதாக அட்லி ஃபீல் செய்துள்ளார். இதனால் அப்பாடலையும், தேவையில்லாத ஒன்றிரண்டு காட்சிகளையும் வெட்டிவிடலாம் என அட்லி முடிவெடுத்தாராம். ஆனால், பாடலை நீக்குவது விஜய்யின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தரும் என்பதால் தயாரிப்பாளர் தாணு அதற்கு சம்மதிக்கவில்லையாம். ஒருவழியாக இருதரப்பும் பேசி வேறொரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
எதையும் நீக்காமல் முழுப்படத்தையும் முதல் காட்சியில் அப்படியே ஓடவிடலாம் எனவும், அதற்கு வரும் விமர்சனங்களையும், ரசிகர்களின் வரவேற்பையும் பொருத்து அந்த வெர்ஷனையே தொடர்வதா? அல்லது அட்லி கூறியபடி பாடல் மற்றும் ஒன்றிரண்டு காட்சிகளை நீக்கிய வெர்ஷனை மாற்றுவதா? என்ற முடிவை எடுக்கலாம் என பேசி உறுதி செய்துள்ளார்களாம். இதனால் முதல் காட்சிக்குப் பிறகான ‘தெறி’யில் சிற்சில ‘கட்’ இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே விஜய்யின் ‘கத்தி’யில் ‘பாலம்...’ என்ற பாடலும், ‘ஜில்லா’வில் ‘மாமா எப்போ ட்ரீட்டு...’ பாடலும் முதல் காட்சிக்குப் பிறகு நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...