‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கியிருக்கும் ‘தெறி’ தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ஒவ்வொரு ஏரியாவும் மிகப் பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போது அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தை விட சில தியேட்டர்களில் அதிகமாக கட்டணம் வசூலிப்பதும், பிரத்தியேக காட்சிகளை வைத்து வசூல் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ‘தியேட்டரில் அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே பொதுமக்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும், இதனை மீறி யாராவது அதிக கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்தால் அரசாங்கம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து ‘தெறி’ படத்தை வாங்கிய சில விநியோகஸ்தர்கள் பிரச்சனையை எழுப்பியுள்ளார்கள் என்றும் அது சம்பந்தமாக அவர்களுடன் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.
நேற்று நடந்த ‘தெறி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து இயக்குனர் அட்லியிட்ம் கேட்டபோது, ‘‘என் வேலை படத்தை ஒழுங்காக எடுத்து கொடுப்பது மட்டும் தான். சென்சார் சர்டிஃபிக்கெட் வாங்கி கொடுத்ததுடன் என்னோட வேலை முடிந்து விட்டது! பட வியாபாரம் என்பது தயாரிப்பாளர் சம்பந்தப்பட்டது. அதை தாணு சார் பார்த்து வருகிறார். ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்! நாங்கள் திட்டமிட்டபடி ‘தெறி’ அனைத்து ஏரியாக்களிலும் 14-ஆம் தேதி வெளியாகும்’’ என்றார்.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...