ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘தனி ஒருவன்’ படம் மூலம் மீண்டும் களமிறங்கிய அர்விந்த் சாமிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்தது. சித்தார்த் அபிமன்யூ கேரக்டருக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியுடன் ‘போகன்’ படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார் அர்விந்த் சாமி. இவரின் இந்த புகழ் வெளிச்சத்தை தங்களின் நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தத் தயாராகிவிட்டது பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.
‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்நிகழ்ச்சியை நடிகர் சூர்யாவும், பிரகாஷ் ராஜும் இதற்கு முன்பு தொகுத்து வழங்கியுள்ளனர். இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து ‘ஹாட் சீட்’டிற்கு எதிரே அமரவிருக்கிறார் அர்விந்த் சாமி. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக அர்விந்த் சாமிக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக ஒதுக்கப்பட்டுள்ளதாம். விரைவில் இந்நிகழ்ச்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...