டீஸர் வெளியிடத் தயாராகும் ‘இருமுகன்’?

டீஸர் வெளியிடத் தயாராகும் ‘இருமுகன்’?

செய்திகள் 13-Apr-2016 12:19 PM IST Chandru கருத்துக்கள்

‘10 எண்றதுக்குள்ள’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரமும், ‘அரிமா நம்பி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஆனந்த் சங்கரும் ‘இரு முகன்’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள். ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடித்துள்ளார். கூடவே நித்யா மேனனும் முக்கிய வேடமொன்றில் நடித்துள்ளார். அறிவியல் சம்பந்தப்பட்ட க்ரைம் த்ரில்லரான இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்துள்ளதாக ஆனந்த் சங்கர் அறிவித்துள்ளார். இது குறித்து, ‘‘ஒரு முகன் ஷூட்டிங் முடிந்தது. மற்றொரு முகனுக்கு விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம். அடுத்து... டீஸருக்கான நேரம்..?’’ என ட்வீட் செய்துள்ளார். சென்னை, லடாக், பேங்காக், மலேசியா, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மே முதல் வாரத்தில் படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;