கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜை தவிரக்க காரணம்?

கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜை தவிரக்க காரணம்?

செய்திகள் 12-Apr-2016 2:54 PM IST VRC கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கவிருக்கிறார். கே.வி.ஆனந்த் இதுவரை இயக்கிய படங்களில் ‘கனா கண்டேன்’ படம் தவிர்த்து அத்தனை படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைப்பாளர். அப்படியிருக்க, இப்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு அதியை இசை அமைப்பாளராக தேர்வு செய்துள்ளார் கே.வி.ஆனந்த். ஹாரிஸ் ஜெயராஜை தவிர்த்து ‘ஹிப் பாப் தமிழா’ ஆதியை இசை அமைப்பாளராக தேர்வு செய்ய காரணம், ‘தனி ஒருவன்’ படத்தில் ஆதியின் இசை, கே.வி.ஆனந்தை மிகவும் கவர்ந்ததாம்! அது மட்டுமில்லாமல் ஒரு மாற்றம் வேண்டும் என்றும் நினைத்துள்ளார் கே.வி.ஆனந்த்! மற்றபடி ’எனக்கும் ஹாரிஸுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம்’’ என்று அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் கே.வி.ஆனந்த்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;