சூர்யாவின் 24-க்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்குமான பொருத்தம்!

சூர்யாவின் 24-க்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்குமான பொருத்தம்!

செய்திகள் 12-Apr-2016 11:04 AM IST VRC கருத்துக்கள்

சூர்யா நடித்த ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், மீண்டும் சூர்யா நடிப்பில் இசை அமைத்துள்ள படம் ‘24’. விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா தனது ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையிலும் ஹைதராபாத்திலும் மிக சிறப்பாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பில் முதன் முதலாக வெளியான படம் மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’. இந்த படம் 1992-ல் வெளியானது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிய ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்கு வந்து 24 ஆண்டுகள் ஆகிறது. ‘ரோஜா’வை தொடர்ந்து இசைத்துறையில் பல சாதனைகள் படைத்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது 24-ஆம் ஆண்டில் சூர்யா நடித்துள்ள ‘24’ படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘24’ படப்பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிற நிலையில் இந்த பொருத்தமும் ரசிகரகளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக அமைந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;