அதர்வாவுடன் இணையும் அனைகா!

அதர்வாவுடன் இணையும் அனைகா!

செய்திகள் 12-Apr-2016 10:21 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் அதர்வா தயாரிப்பாளராகவும் களமிறங்கி தயாரிக்கும் படம் ‘செம போத ஆகாத’. ‘கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்’ என பெயரிடப்பட்டிருக்கும் தனது நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் அதர்வாவே கதாநாயகனாக நடிக்க, தன்னை ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்த பத்ரி வெங்கடேஷுக்கு தனது முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார் அதர்வா. இப்படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ‘காவியத்தலைவன்’ பட புகழ் அனைகா நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. செம போத ஆகாத படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டீசர்


;