நிவின் பாலி, துல்கர் சல்மானை தொடர்ந்து ஃபஹத் ஃபாசில்!

நிவின் பாலி, துல்கர் சல்மானை தொடர்ந்து ஃபஹத் ஃபாசில்!

செய்திகள் 11-Apr-2016 5:42 PM IST VRC கருத்துக்கள்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசிலும் நடிக்கவிருக்கிறார். நிவின் பாலி, துல்கர் சல்மான் ஆகியோரை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகவிருக்கும் ஃபஹத் ஃபாசில் மலையாளம் மற்றும் தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய ஃபாசிலின் மகன் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழில் அறிமுகமாவது குறித்து ஃபஹத் ஃபாசில் கூறும்போது,

‘‘தமிழ் திரைப்படங்கள் மீது எனக்கு அலாதி ப்ரியம் உண்டு. அதிலும் மோகன் ராஜா இயக்கிய 'தனி ஒருவன்' படம் என்னை பிரமிக்க வைத்தது. அவரது நேர்த்தியான இயக்கம், அருமையான காட்சி அமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவர் இயக்கும் படம் மூலம் தமிழில் அறிமுகமாவதில் மட்டற்ற மகிழ்ச்சி! மிக குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன். அவருடன் நடிக்கவிருப்பதும் எனக்கு சந்தோஷமான விஷயம்’’ என்றார். ‘24 AM STUDIOS’ நிறுவனத்தின் சார்பில் ஆர். டி. ராஜா தயாரிக்கும் இப்படம் மிக பிரம்மாண்டமான் முறையில் உருவாகவிருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;