‘24’ ஆடியோ வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

‘24’ ஆடியோ வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

செய்திகள் 11-Apr-2016 1:39 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா தனது ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக தயாரித்து, நடித்திருக்கும் ‘24’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இப்படத்தில் சூர்யா மூன்று மாறுபட்ட கேர்கடர்களில் நடிக்க, சமந்தா, நித்யா மேன்ன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி திரையில் வெளியிட, பாடல்களை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். அதற்கு முன் நடிகர் சிவகுமார் பேசும்போது,
‘‘நான் இந்த விழாவுக்கு வேடிக்கை பார்க்க தான் வந்தேன்! ஆனால் என்னை மேடையில் ஏற்றி விட்டார்கள். பாலச்சந்தர் சார் இயக்கத்தில் ‘அக்னிசாட்சி’ பத்தில் நடிக்கும்போது அவர் எனக்கு ‘சைலன்ட் சகலகலா வல்லவன்’ என்று ஒரு டைட்டில் கொடுத்தார். ஆனால் அந்த டைட்டிலுக்கு மிகவும் பொருத்தமான நபர் சூர்யா தான்! அவன் ஸ்கூலில் படிக்கும்போதாகட்டும், கல்லூரியில் படிக்கும்போதாகட்டும் ரொம்பவும் சைலம்டான ஒரு பையன்! அப்படி சைலன்டாக இருந்த அந்த பையன் இன்று சாதித்துக் கொண்டிருக்கிறான். ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த ‘24’ படத்தை இயக்கியிருக்கும் விக்ரம் குமார், இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் என படத்தில் பணிபுரிந்த அத்தனை பேருக்கும் என்னோட வாழ்த்துக்கள்! இந்த படம் மாபெரும் வெற்றிபெறும்’’ என்றார்.

அதன் பிறகு நடிகர் கார்த்தி பேசும்போது, ‘‘இந்த படத்தை நான் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து விட்டேன். இந்த படத்தில் மணி என்று ஒரு பயன் நடித்திருக்கிறார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும்! அதைப்போன்று ஒரு வில்லன் நடித்திருக்கிறார்! அவர் யார் என்பதும் உங்களுக்கு தெரியும். எனக்கு பத்து வயசு ஆகிற வரைக்கும் எனக்கு வில்லனாக இருந்தவர் அவர் தான்! எனக்கு அப்பவே தெரியும் அவருக்குள் ஒரு வில்லன் இருக்கிறார் என்று! இந்த படத்தில் அதைவிட எல்லாம் வேற ஒரு லெவலில் பண்ணியிருக்கிறார்! அதற்கு ஏற்ற மாதிரி அருமையான ஒரு ஸ்கிரிப்ட்டை அமைத்திருக்கிறார் விக்ரம் குமார் சார்! அந்த ஸ்கிரிப்ட்டுக்கு அருமையான மியூசிக் தந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் சார். அவரோட இசையில் அமைந்துள்ள அத்தனை பாடல்களும் அருமையாக அமைந்துள்ளது. இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையும்’’ என்றார்!.

கார்த்தியை தொடர்ந்து சூர்யா பேசும்போது, ‘‘என்னை பற்றி அப்பா இப்படி உயர்வாக பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அப்பா என்னை இப்படி உயர்வாக பேசும் அளவுக்கு என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்தவர்கள் (ரசிகர்களை பார்த்து) நீங்கள் தான்! நீங்கள் இல்லாமல் நான் இந்த இடத்தை அடைந்திருக்க முடியாது. இப்போது நான் உங்களை அதிகமக சந்திப்பது கூட கிடையாது. அதற்கு நேரம் இல்லாமை தான் காரணம். நீங்கள், நான் நல்ல ஒரு படம் பண்ணியிருந்தால் மட்டும் அதை பார்த்து ஜெயிக்க வையுங்கள்! படம் நல்லா இல்லை என்றார்ல் அதை பார்க்காதீர்கள்! அப்படி பண்ணும்போது தான் நான் என்னை திருத்திக் கொள்ள முடியும். இப்படத்தை இயக்கியிருக்கும் விக்ரம் குமார் அவர்கள் மீது எனக்கு பெரும் மரியாதை இருக்கிறது. தமிழில் ஒரு படத்தை இயக்கிய பிறகு தெலுங்குக்கு போய் அங்கும் வெற்றிபெற்று மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அவரைப் போல எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு போய் எல்லோரும் வொர்க் பண்ணுங்கள்! அப்படி செய்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் ஜெயிக்கலாம். அவருடன் உண்மையாக, மனதார விரும்பி ஒரு அழகான படத்தை பண்ணியிருக்கிறோம். இப்படம் பிரம்மாண்டமாக உருவாக ஏ.ஆர்.ரஹ்மான் சாரும் ஒரு காரணம். அவரோட இசை இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. உங்கள் எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார் சூர்யா!

விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் விகரம் குமார், நித்யா மேனன், ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா, ‘2டி’ நிறுவனத்தை சேர்ந்த ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த டி.சிவா. பி.எல்.தேனப்பன் மற்றும் பலர் பேசினர். விழா துவக்கத்தில் படத்தின் மூன்று பாடல்களை மேடையில் பென்னி தயாள், சின்மயி, நித்யாமேனன் முதலானோர்கள் பாடினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;