சாதனைப் பட்டியலில் ஐ, தெறியைத் தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா!

சாதனைப் பட்டியலில் ஐ, தெறியைத் தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா!

செய்திகள் 11-Apr-2016 10:51 AM IST Chandru கருத்துக்கள்

சினிமா உலகத்தில் சமூக வலைதளங்களின் பங்களிப்பும், இணையதளமும் மிகப்பெரிய தாக்கத்தைத் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர், யு ட்யூப் போன்றவை சினிமா உலகத்தினரின் மிகப்பெரிய வரப்பிரதமாக மாறிவிட்டது. அந்த வகையில் யு ட்யூபில் வெளியிடப்படும் பாடல்கள், டீஸர், டிரைலர் ஆகியவற்றிற்கு எத்தனை பார்வையிடல்கள் கிடைக்கின்றன என்பதை ஒரு சாதனையாகவே ரசிகர்கள் பார்க்கத் துவங்கிவிட்டனர். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஷங்கரின் ‘ஐ’ பட டீஸர் 1 கோடி பார்வையிடலைப் பெற்ற முதல் டீஸர் வீடியோ என்ற சாதனையைப் படைத்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் விஜய்யின் ‘தெறி’ டீஸரும் இந்த சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தது.

ஐ, தெறியைத் தொடர்ந்து 1 கோடி பட்டியலில் தற்போது கௌதம்மேனன், சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படமும் இணைந்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிங்கிள் ட்ராக்காக யு ட்யூப்பில் வெளியிடப்பட்ட ‘தள்ளிப்போகாதே...’ பாடல் வரிகள் வீடியோவிற்கு 1 கோடி பார்வையிடல்கள் கிடைத்துள்ளன. விரைவில் இப்படத்தின் ஆல்பம் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;