12வது படத்திற்கு பூஜை போட்ட உதயநிதி!

12வது படத்திற்கு பூஜை போட்ட உதயநிதி!

செய்திகள் 11-Apr-2016 10:44 AM IST Chandru கருத்துக்கள்

‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனத்தைத் தொடங்கி, 2008ல் ‘குருவி’ படம் மூலம் தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் களமிறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தாலும், இன்னொருபுறம் நடிகராகவும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

குருவி முதல் விரைவில் வெளியாகவிருக்கும் ‘மனிதன்’ வரை 11 படங்களைத் தயாரித்திருக்கும் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனத்தின் 12வது படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதி, விஷ்ணு விஷால் நாயகர்களாக நடிக்க, மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இப்படத்தின் பூஜை இன்று காலை இனிதே நடைபெற்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;