‘குற்றப்பரம்பரை’ விவகாரம் – இயக்குனர் பாலா எச்சரிக்கை!

‘குற்றப்பரம்பரை’ விவகாரம் – இயக்குனர் பாலா எச்சரிக்கை!

செய்திகள் 9-Apr-2016 9:48 AM IST VRC கருத்துக்கள்

‘குற்றப்பரம்பரை’ படத்தை இயக்குவது தொடர்பாக இயக்குனர் பாரதிராஜாவுக்கும், இயக்குனர் பாலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தீடீரென்று ‘குற்றப்பரம்பரை’ படத்தை இயக்க பாரதிராஜா பூஜை போட்டார். இதனை தொடர்ந்து மேலும் பூதாகாரமாகியுள்ள இந்த பிரச்சினை குறித்து விளக்கம் அளிக்க நேற்று இயக்குனர் பாலா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘குற்றப்பரம்பரை’ விவகாரத்தில் நான் காயப்பட்டிருக்கிறேன். ‘குற்றப்பரம்பரை’ நாவல் வேல ராமமூர்த்தி என்பவரால் எழுதப்பட்டது. அதற்கு முன்பு ‘கூட்டாஞ்சோறு’ என்ற கதைய அவர் எழுதிருந்தார். அந்த ‘கூட்டாஞ்சோறு’ கதையை படமாக்கும்படி அவர் என்னிடம் கூறியிருந்தார். நானும் அந்த கதையின் ஒரு பகுதிய எடுத்துக்கொண்டு கற்பனையாக மேலும் சில விஷயங்களை சேர்த்து படமாக்கலாம் என்று சொல்லியிருந்தேன். அதை படமாக்க தான் நான் திட்டமிட்டுள்ளேன். இது தான் உண்மை. இந்த நிலையில் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளும் ரத்னகுமார் என்பவர் அவரது கதையை நான் படமாக்குவதாக பாராதிராஜாவின் முதுகுக்கு பின்னால் நின்று கொண்டு அவதூறு பேசி வருகிறார். ‘குற்றப்பரம்பரை’ என்பது கதையல்ல, அது வரலாறு! அந்த வரலாற்றை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம். அப்படியிருக்க, பாரதிராஜா எனக்கு ஃபோன் செய்து அவர் எடுக்கும் ‘குற்றப்பரம்பரை’ கதைய படமாக்கக் கூடாது என்றார். நான் அவரிடத்தில் வேறு கதையை தான் நான் படமாக்குகிறேன் என்று விளக்கம் அளித்தேன். மீண்டும் ஃபோன் செய்து, ‘குற்றப்பரம்பரை’ என்ற தலைப்பு வைக்கக் கூடாது என்றார். அதற்கும் சரி என்றேன். அதன் பிறகும் பாரதிராஜா என்னை அநாகரிமகான வாத்தைகளால் பேசி பேட்டி கொடுத்தார். ரத்னகுமார் என் மீது வழக்கு போடுவேன் என்கிறார். அத்துடன் ‘பாரதிராஜாவின் ஷூவை துடைத்து அவரிடம் பாலா உதவியாளராக வேலை செய்யலாம்’ என்பது போன்று தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். எனக்கு ஒரே குரு தான்! அவர் பாலுமகேந்திரா தான்! வேறு யாரிடமும் வேலை செய்ய வேண்டிய அவசியம் என்க்கில்லை.

இந்த பிரச்சனைகளுக்கு முன்னாடி நான் பாரதிராஜா நடத்திய ‘குற்றப்பரம்பரை’ பூஜைக்கு கூட நான் செல்வதாக இருந்தேன். இதே ரத்னகுமார் தான் ‘பிதாமகன்’ படப்பிடிப்பின்போது என்னிடம் வந்து பாரதிராஜாவை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசினார். உங்களால் தான் ‘குற்றப்பரம்பரை’ கதையை படமாக்க முடியும் என்றார். அப்படிப்பட்டவர் இப்போது பாரதிராஜாவுடன் இணைந்து என்னைப்பற்றி அவதூறாக பேசி வருகிறார்,.

எதற்கெடுத்தாலும் நாங்க தான் மண்ணுக்கு சொந்தக்காரர்கள், எங்களுக்குதான் படம் எடுக்க உரிமை உண்டு என்று பேசுகிறார்கள். யார் படம் எடுக்க வேண்டாம் என்று சொன்னேன். எதற்கு என்னை இதில் இழுக்குகிறீர்கள்? வரலாற்றை, சரித்திரத்தை யார் வேண்டுமானாலும் படமாக எடுக்கலாம். எடுக்கக் கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரமும், உரிமையும் கிடையாது. இதுவரை நான்கு முறை என்னை அவதூறாக பேசியிருக்கிறார்கள். இதுவரை பொறுமையாக இருந்தேன். இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாது. இனி ஒரு தடவை பாரதிராஜாவோ, ரத்னகுமாரோ என்னப்பற்றி அவதூறாக பேசினால் அது உங்களுக்கு நல்லது இல்லை என்று இந்த பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் எச்சரிக்கிறேன். என்னிடம் நேர்மை இருக்கிறது. பாரதிராஜாவுக்கு மட்டும் தான் உணர்சிவசப்பட்டு பேச முடியும் என்பதிலை. எங்களுக்கும் உணர்ச்சி இருக்கிறது. அதை இருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நான் இயக்கவிருக்கும் (இன்னும் பெயரிடப்படாத) படத்தின் பூஜை மூன்று நான்கு மாதங்களில் நடைபெறும். இப்படத்தில் விஷால், ஆர்யா உள்பட பல முன்னணி கலைஞர்கள் பங்கு பெற இருக்கிறார்கள்’’ என்றார் பாலா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;