சேது நடிக்கும் ஆளுக்கு பாதி!

சேது நடிக்கும் ஆளுக்கு பாதி!

செய்திகள் 8-Apr-2016 1:04 PM IST VRC கருத்துக்கள்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, சமீபத்தில் வெளியான் ‘வாலிப ராஜா’ படங்களை தொடர்ந்து சேது கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஆளுக்கு பாதி 50-50’. இந்த படத்தில் சேதுவுக்கு ஜோடியாக ‘144’ படத்தில் நடித்த ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். இவரை தவிர இப்படத்தில் மற்றுமொரு ஹீரோயின் கேரக்டரும் உண்டாம்! அவருக்கான தேர்வு நடந்து வருகிறது. அறிமுக இயக்குனர் கிருஷ்ண சாய் இயக்கும் இப்படத்தில் சேது, ஸ்ருதி ராமகிருஷ்ணனுடன் பாலசரவணன், மயில்சாலி, ‘பட்டிமன்றம்’ ராஜா, ‘மொட்டை’ ராஜேந்திரன், ஜான் விஜய் முதலானோரும் நடிக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படமாம் இது. இப்பத்திற்கு தரண் இசை அமைக்கிறார்,. ஆர்.கே.பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை கும்பகோணம் பகுதிகளில் படமாகும் இப்படத்தின் மூன்று பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;