தமிழக தேர்தலுக்கு முன் ‘கோ-2’

தமிழக தேர்தலுக்கு முன் ‘கோ-2’

செய்திகள் 8-Apr-2016 12:35 PM IST VRC கருத்துக்கள்

கே.வி ஆனந்த் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அரசியல் த்ரில்லரான ‘கோ’ படத்தை தயாரித்த எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் தங்களின் ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்’ சார்பாக தயாரித்திருக்கும் படம் ‘கோ-2’. ‘‘முந்தைய படத்தை போலவே இப்படமும் மீடியா மற்றும் அரசியலை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மே மாதம் 16-ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ‘கோ-2’ படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது’’ என்று கூறும் தயாரிப்பு தரப்பினர், இப்படத்தை தமிழக தேர்தலுக்கு முன்னதாக மே 6-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். சரத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ், பாலசரவணன் முதலானோர் நடித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாமி 2 ட்ரைலர்


;