மலையாள படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுத்திரகனி

மலையாள படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுத்திரகனி

செய்திகள் 8-Apr-2016 11:20 AM IST VRC கருத்துக்கள்

ஏற்கெனவே சில மலையாள படங்களில் நடித்துள்ள சமுத்திரகனி, தற்போது நடித்து முடித்துள்ள மற்றொரு மலையாள படம் ‘ஒப்பம்’. ப்ரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சமுத்திரகனிக்கு முக்கியமான ஒரு வேடமாம்! இப்படம் தவிர ‘கரிங்குன்னம் சிக்ஸ்’ என்ற மலையாள படத்திலும் நடிக்கவிருக்கிறார் சமுத்திரகனி. ‘36 வயதினிலே’ படத்தைப் போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இப்படத்தில் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்த மஞ்சு வாரியரே நடிக்க, சமுத்திரகனிக்கும் இப்படத்தில் நல்ல கேரக்டராம். முதலில் இந்த கேரக்டரில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. தனுஷும் ஏற்கெனவே ‘கம்மத்து & கம்மத்து’ என்ற மலையால படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சமின்றி - டிரைலர் 2


;