முக்தா சீனிவாசன் கலையுலகில் கால் பதித்து 70 வருடங்களாகிறது. ‘முக்தா ஃபிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பல படங்களை தயாரித்தும், இயக்கியும் தொடர்ந்து சினிமாவில் இருந்து வரும் முக்தா சீனிவாசன், ‘வேதாந்த தேசிகர் 750வது வருட விழா’ என்ற பட நிறுவனத்துடன் இணைந்து ‘தூப்புல் வேந்தாந்த தேசிகன்’ என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார். 750 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் வேதாந்த தேசிகர். ‘கடவுளை வணங்குவதை விட குருவை வணங்கினாலே போதும், நீ கடவுளை வணங்குவதற்கு சமம்’ என்று சொன்னவர் வேதாந்த தேசிகர். இவர் காஞ்சிபுரம் தூப்புல் என்ற ஊரில் பிறந்தவர். அவரது வாழ்வியலை ‘தூப்புல் வேதாந்த தேசிகர்’ என்ற பெயரில் படமாக்குகிறர் முக்தா சீனிவாசன். இதில் டைட்டில் கதாபாத்திரத்தில் துஷ்யந்த் ஸ்ரீதர் நடிக்கிறார். மற்றும் ஆடிட்டர் ஸ்ரீதர், கிரேஷி சுந்தர் ராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள். வேதாந்த தேசிகராக நடிக்கும் துஷ்யந்த் ஸ்ரீதர் அந்த காலத்தில் பேசப்பட்ட தமிழ், சமஸ்கிருதம் கலந்த மொழியான மணிப்பிரவாளம் என்ற மொழியை பேசி நடிக்க பயிற்சி எடுத்து நடிக்கிறார். லாப நோக்கமில்லாமல் எடுக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை முக்தா சுந்தர் கவனிக்க, முக்தா சீனிவாசன்ம், முக்தா சுந்தரும் இணைந்து இயக்குகிறார்கள்.