‘ஜீரோ’வை தொடர்ந்து தொல்லைக்காட்சி!

‘ஜீரோ’வை தொடர்ந்து தொல்லைக்காட்சி!

செய்திகள் 7-Apr-2016 2:01 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான 'ஜீரோ' படத்தில் கதாநாயகனாக நடித்த அஷ்வின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘தொல்லைக்காட்சி’. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படம் குறித்து அஷ்வின் கூறுகையில், ‘‘தற்போதுள்ள சூழ்நிலையில் தொலைக்காட்சி எவ்வாறு ஒரு மனிதனின் குணத்தை மாற்றுகிறது, சிலருக்கு அது நல்லதாக இருக்கலாம். சிலருக்கோ மோசமான சூழ்நிலையையும் உருவாக்கலாம் என்பதே இப்படத்தின் கதை கரு! இப்படத்தில் எனக்கு ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவனின் கேரக்டர்’’ என்றார்.

இப்படத்தை இயக்கி வரும் சாதிக்கான், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்க, இவர்களுடன் மனோபாலா, சுப்பு பஞ்சு, ஆதவன், மயில் சாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலசெந்தில் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை எம்.ஜி.ரகுராம் கவனிக்க, தரண் குமார் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கேம் ஓவர் ட்ரைலர்


;