‘ஜித்தன்-2’வில் 100 பேய்கள்!

‘ஜித்தன்-2’வில் 100 பேய்கள்!

செய்திகள் 7-Apr-2016 11:54 AM IST VRC கருத்துக்கள்

மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ‘ஜித்தன்’ ரமேஷ் நடிப்பில் நாளை (8-4-16) ரிலீசாகவிருக்கும் படம் ‘ஜித்தன-2’. ஹாரர் பட வரிசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ‘ஜித்தன்’ ரமேஷுக்கு ஜோடியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்க, இயக்குனர் வின்சென்ட் செல்வாவின் சிஷ்யர் ராகுல் பரமஹம்சா இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த தேவா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் சம்பந்தப்பட்ட வேலைகளில் பிசியாக இருந்த ‘ஜித்தன்’ ரமேஷ் படம் குறித்து பேசும்போது,
‘’10 வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஜித்தன்’ படத்தின் தொடர்ச்சி தான் இப்படம்! அதில் எனக்கு மாய மனிதன் வேடம். இதில் ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு பேய் வேடம். அவரால் எனக்கு என்ன பிரச்சனை வருகிறது என்பது தான் படம். இது முழுநீள காமெடி ஹாரர் படம்.

புதிய வீடு வாங்கி அதில் வாழ ஆசைப்படும் என்னை பேய் எப்படி விரட்டுகிறது என்ற விஷயத்தை வின்சென்ட் செல்வா மாறுபட்ட வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். அதனை விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடன் படமாக்கியுள்ளார் இயக்குன்ர் ராகுல் பரமஹம்சா! இப்படத்தின் கிளைமேக்ஸில் கிட்டத்தட்ட100 பேய்களுடன் நான் போராடுவதாக அமைந்துள்ள காட்சி படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் வகையில் படு த்ரில்லிங்காக படமாக்கியிருக்கிறார்கள். வரிசையாக பேய் படங்கள் வருகிறது. அந்த வகையில் இதுவும் ஒரு பேய் படம் என்றில்லாமல், ரசிகர்களுக்கு மாறுபட்ட ஒரு அனுபவத்தை தரும் விதமாக ‘ஜித்தன்-2’ இருக்கும்’’ என்றார் ரமேஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யூ டர்ன் - ட்ரைலர்


;