சூர்யா - ஏ.ஆர்.ரஹ்மானின் ‘24’ ஆல்பத்தில் என்ன ஸ்பெஷல்?

சூர்யா - ஏ.ஆர்.ரஹ்மானின் ‘24’ ஆல்பத்தில் என்ன ஸ்பெஷல்?

கட்டுரை 7-Apr-2016 11:10 AM IST Chandru கருத்துக்கள்

‘சில்லுன ஒரு காதல்’ படத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து மீண்டும் சூர்யாவின் ‘24’ படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதபோதும், பாடல்களுக்காகவே பெரிதும் பேசப்பட்ட படம் ‘சில்லுனு ஒரு காதல்’. இதனால் இக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘24’ படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள ‘காலம் என் காதலி’ என்ற பாடலின் சிங்கிள் டிராக் வெளிவந்து பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ள நிலையில், தற்போது ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற பாடல்களின் விவரங்களும் வெளிவந்துள்ளன. வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ள ‘24’ ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் விவரம் இதோ...

1. நான் உன்...
பாடியவர்கள் : அர்ஜித் சிங், சின்மயி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

2. மெய் நிகர...
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், சனா மொய்தத்தி, ஜோனிதா காந்தி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

3. புன்னகையே...
பாடியவர்கள் : ஹரிச்சரண், ஷாஷா திருப்பதி
பாடலாசிரியர் : வைரமுத்து

4. ஆராரோ...
பாடியவர் : சக்திஸ்ரீ கோபாலன்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

5. மை ட்வின் பிரதர்...
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணன், ஹ்ருதய் கட்டானி

6. காலம் என் காதலி...
பாடியவர்கள் : பென்னி தயாள், ஷாஷ்வத் சிங், அபய் ஜோத்புர்கர்
பாடலாசிரியர் : வைரமுத்து

மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ள ‘24’ ஆல்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் குரலைக் கேட்க முடியவில்லையே என்ற வருத்தத்தைத் தவிர்த்து, ரசிகர்களுக்கு பெரிய விருந்து நிச்சயம் காத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;