சுந்தர பாண்டியன், பிரம்மனைத் தொடர்ந்து வெற்றிவேல்!

சுந்தர பாண்டியன், பிரம்மனைத் தொடர்ந்து வெற்றிவேல்!

செய்திகள் 7-Apr-2016 11:04 AM IST Chandru கருத்துக்கள்

இயக்குனர் சசிகுமார் நடிகராக மாறியதும், இயக்கத்திற்கு தற்காலிக விடுமுறை அளித்து முழுநேர நடிகராக மாறிவிட்டார். ‘ஈசன்’ படத்திற்குப் பிறகு வேறெந்த படத்தையும் அவர் இயக்கவில்லை. தனது குருநாதர் பாலுமகேந்திராவுக்காக ‘தலைமுறை’ படத்தை தயாரித்தவர், மற்றொரு குருநாதர் பாலாவுக்காக ‘தாரை தப்பட்டை’யில் நடிகராக இரண்டு வருடங்களை அர்ப்பணித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் வசந்தா மணி இயக்கத்தில் ‘வெற்றிவேல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இப்படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 21 நிமிடங்கள்.

சசிகுமாரின் முந்தைய படமான ‘தாரை தப்பட்டை’க்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அதேபோல் அவர் நடிப்பில் வெளியான ‘குட்டிப்புலி’ குடும்பப்படமாக உருவான போதும் அதிகப்படியான வன்முறை காட்சிகள் காரணமாக யு/ஏ சான்றிதழ் பெற்றது. சசிகுமாரின் சுந்தரபாண்டியன், பிரம்மன் படத்தைத் தொடர்ந்து ‘வெற்றிவேல்’ படத்திற்கும் யு சான்றிதழ் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;