‘ஜித்தன்-2’வில் இன்டர்நேஷனல் சவுண்ட் ட்ராக்ஸ்!

‘ஜித்தன்-2’வில் இன்டர்நேஷனல் சவுண்ட் ட்ராக்ஸ்!

செய்திகள் 6-Apr-2016 3:37 PM IST VRC கருத்துக்கள்

‘அ முதல் ஃ தானடா இவ எவர் சில்வர் தட்டு தானடா’ என்ற ‘ஜித்தன்’ படப் பாடலை தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக ‘ஜித்தன்-2’ என்ற படத்தை எடுத்திருக்கிறார்கள்! வருகிற 8-ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் இப்படத்தில் ‘ஜித்தன்’ ரமேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, மயில்சாமி, யோகி பாபு, ரோபோ சங்கர், கருணாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘ஜித்தன்’ படத்தை இயக்கிய வின்சென்ட் செல்வாவின் உதவியாளர் ராகுல் பரமஹம்சா தனது ‘ஆர்.பி.எம்.சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்கியுள்ளார். ‘ஜித்தன்-2’ படம் குறித்து ‘ஜித்தன்’ ரமேஷ் நம்மிடம் பேசும்போது,
"என் சினிமா பயணத்தில் எனக்கு ஓரு மைல்கல்லாக அமைந்த திரைப்படம் 'ஜித்தன்'. அன்று முதல் இன்று வரை ‘ஜித்தன்’ படத்தில் இடம் பெற்ற 'அ முதல் ஃ தானடா' என்ற பாடல் ஒலிக்காத மேடை கச்சேரியே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு புகழ்பெற்ற பாடல் அது! அந்த பாடலை விட 10 மடங்கு நச்சென்று இருக்கிற ஒரு குத்து பாடல் ‘ஜித்தன்-2’விலும் இடம் பெறுகிறது. ‘ஜித்தன்’ படத்திற்கு இசை அமைத்த ஸ்ரீகாந்த் தேவா தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர். இப்படத்திற்காக வெளிநாட்டில் இருந்து பின்னணி இசைக்காக வரவழைக்கப்பட்ட ‘சவுண்ட் ட்ராக்ஸ்’ படத்திற்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது. படம் முழுக்க காமெடி இருக்கும். ஹாரரும் இருக்கும். வழக்கமான ஹாரர் படங்களில் இருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். இதில் என்ன ஹைலைட்ஸ் இருக்கிறது என்பதை சொன்னால் படம் பார்க்கும்போது உங்களுக்கு சுவாரஸ்யம் இருக்காது. அதை நீங்கள் நேரிலேயே அனுபவியுங்கள்’’ என்கிறார் ‘ஜித்தன்’ ரமேஷ்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள வின்சென்ட் செல்வா படம் குறித்து கூறும்போது, ‘‘படத்தின் கதைப்படி முதல் பாகத்தில் இறந்துப்போன ரமேஷ் இந்த பாகத்தில் மீண்டும் பிறந்து, பேயுடன் மாட்டிக்கொண்டு வாழும் தருணங்களே ‘ஜித்தன்-2’ வின் கதை கரு. ‘ஜித்தன்’ படத்தைப் போன்று ‘ஜித்தன்-2’ திரைப்படமும் நிச்சயமாக ரசிகர்களின் மனதை வென்று மாபெரும் வெற்றிபெறும்’’ என்றார்.

‘ஜித்தன்-2’ படத்தை இயக்கியிருக்கும் ராகுல் பரமஹம்சா கூறுகையில், "பொதுவாக பேய் என்றால் பயம் மட்டும் தான் என்று நினைத்து வருகிறார்கள். ஆனால், அதற்கு அப்பாற்பட்டு வேறு சில விஷயங்களும் உள்ளது என்ற கருத்தை இப்படத்தில் புதிய கோணத்தில் கூறி இருக்கிறோம். இந்த மாறுபட்ட ஒரு ஹாரர் படத்தை பார்த்த திருப்தியை தரும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யூ டர்ன் - ட்ரைலர்


;