‘ராஜா ராணி’யின் வெற்றி ஃபார்முலாவில் உருவாகியுள்ள ‘தெறி’!

‘ராஜா ராணி’யின் வெற்றி ஃபார்முலாவில் உருவாகியுள்ள ‘தெறி’!

செய்திகள் 6-Apr-2016 10:28 AM IST Chandru கருத்துக்கள்

அட்லியின் முதல் படம் ‘ராஜா ராணி’. ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 40 நிமிடங்கள். படத்திற்குக் கிடைத்த சென்சார் சான்றிதழ் யு. தற்போது விஜய்யை நாயகனாக வைத்து தான் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான ‘தெறி’யிலும் அதே ஃபார்முலாவை பின்பற்றியிருக்கிறார் அட்லி. இப்படத்திற்கும் சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதோடு, படத்தின் ரன்னிங் டைமும் 2 மணி 38 நிமிடங்களில் இருப்பதுபோல் உருவாக்கியிருக்கிறார்.

டீஸருக்கு 1 கோடிக்கும் மேற்பட்ட யு டியூப் பார்வையிடல்களும், 3 லட்சத்திற்கு மேற்பட்ட லைக்குகளும் கிடைத்திருக்கும் சந்தோஷத்தோடு, தன் முதல் படத்தின் வெற்றி ஃபார்முலாவையே இரண்டாவது படத்திறகும் பயன்படுத்தியிருப்பது என ‘தெறி’க்கு இப்போது பாசிட்டிவ் வைப்ரேஷன்கள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;