‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா நடித்து வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ எஸ்.நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் ‘வீரசிவாஜி’ படத்தை தயாரித்து வருகிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் ‘கத்திச்சண்டை’ என்ற படத்தை தயாரிக்கிறார். சுராஜ் இயக்கும் இப்படத்தில் விஷாலுடன் நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். விஷால், வடிவேலு ஏற்கனவே ‘திமிரு’ படத்தில் இணைந்து நடித்து அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஏற்கெனவே ‘தலைநகரம்’, ‘மருதமலை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘கத்திசண்டை’யின் கதாநாயகிக்கான தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...