தமிழ் புத்தாண்டில் ‘பறந்து செல்ல வா’

தமிழ் புத்தாண்டில் ‘பறந்து செல்ல வா’

செய்திகள் 5-Apr-2016 4:03 PM IST VRC கருத்துக்கள்

‘8 பாயின்ட் என்டர்டெயின்மென்ட்’ பி.அருமைச்சந்திரன் தாயாரிப்பில் தனபால் பத்மநாபன் இயக்கும் படம் ‘பறந்து செல்ல வா’. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் சிங்கப்பூரில் நடந்தது. சென்னை விமான நிலையத்தில் நடந்த ஒருநாள் படப்பிடிப்புடன் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிய நடிகர் நாசர் முன்னிலையில் பூசணிக்காய் உடைத்து நிறைவு செய்தனர். சிங்கப்பூரை களமாகக் கொண்டு முழுநீள நகைச்சுவைக் காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாசரின் மகன் லுத்ஃபுதீன் பாஷா கதாநாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

இவர்களுடன் சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, ஞானசம்பந்தன் அகியோரும் நடித்துள்ளனர். படத்தில் இன்னொரு கதாநாயகியாக சீன மக்களிடையே பெரும் புகழ் பெற்ற ஸ்டார் நடிகையான நரேல் கெங் நடித்துள்ளார். இவர்கள் தவிர சிங்கப்பூரின் பிரபல சண்டைப் பயிற்சியாளர் சன்னி பாங் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இப்படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைத்திருக்கிறார். இவரது இசை அமைப்பில் அமைந்துள்ள அனைத்துப் பாடல்களும் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது. இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் ‘பறந்து செல்ல வா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழ் புத்தாண்டன்று வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஓம் சாந்தி ஓம் - டீசர்


;