‘ஜித்தன்-2’ ஆசை நிறைவேறாத மனித ஆத்மாவின் கதை!

‘ஜித்தன்-2’ ஆசை நிறைவேறாத மனித ஆத்மாவின் கதை!

செய்திகள் 5-Apr-2016 3:48 PM IST VRC கருத்துக்கள்

வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘ஜித்தன்’. இப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள படம் ‘ஜித்தன்-2’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை வின்சென்ட செல்வாவே எழுத, அவரது அசிஸ்டென்ட் ராகுல் தயாரித்து இயக்கியிருக்கிறார். கதாநாயகனாக ‘ஜித்தன்’ படத்தில் நடித்த ரமேஷே நடிக்க, முதல் பாகத்திற்கு இசை அமைத்த ஸ்ரீகாந்த் தேவாவே இரண்டாம் பாகத்திற்கும் இசை அமைத்துள்ளார். கதாநாயகியாக ஸ்ருதி டாங்கே நடிக்க, கருணாஸ், மயில் சாமி, யோகி பாபு, சோனா, ரோபோ சங்கர் முதலானோரும் நடித்துள்ள இப்படம் வருகிற 8-ஆம் தேதி ரிலீசாகிறது. ‘ஜித்தன்-2’ குறித்து ‘ஜித்தன்’ ரமேஷ் கூறும்போது, ‘‘ஜித்தன் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. எனக்கு பெயர் தந்த படம் அது! அதைப் போன்ற ஒரு படத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை இயக்குனர் வின்சென்ட் செல்வா சாரிடம் சொன்னேன். பண்ணலாம் என்று சொன்னவர் ஒரு சில நாட்களில் கதையை ரெடி பண்ணி கொடுத்து, இந்த கதையை என் சிஷ்யர் ராகுல் இயக்குவார்’ என்றார். அறிமுக இயக்குனர்.. சரிப்பட்டு வருமா என்று முதலில் தயங்கியபோது, ‘தைரியமாக பண்ணுங்கள், நானும் கூட இருக்கிறேன்’ என்றார் வின்சென்ட் செல்வா சார்! இப்போது படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. முதலில் நான் நினைத்ததை விட படத்தை சூப்பராக எடுத்திருக்கிறார் ராகுல்!

‘ஜித்தன்’ மாய மனிதன் பற்றிய கதை என்றால் இது ஆசைகள் நிறைவேறாமல் இறந்து போகும் ஒரு மனித ஆத்மா பற்றிய கதை! படம் முழுக்க ஹாரர், காமெடி என்று பயணிக்கும். வழக்கமாக வரும் ஹாரர் படங்களிலிருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில் பயணிக்கும்’’ என்றார். இப்படத்தின் ஒளிப்பதிவை விஜய் மில்டனின் அசிஸ்டென்ட் எஸ்.கெ..மிட்செல் கவனிக்க படத்தொகுப்பை எடிட்டர் லெனினின் உதவியாளர் மாருதி கிரிஷ் கவனித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யூ டர்ன் - ட்ரைலர்


;