மெடிக்கல் த்ரில்லரில் போலீசாகும் அருண் விஜய்

மெடிக்கல் த்ரில்லரில் போலீசாகும் அருண் விஜய்

செய்திகள் 5-Apr-2016 11:31 AM IST VRC கருத்துக்கள்

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. மெடிக்கல் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் முதல் படம் இது. அருண் விஜய்யின் Ice-In Cinemas Entertainment நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய ஒரு நாவலை தழுவியது! அதற்கு மாறுபட்ட வகையில் திரைக்கதை வடிவம் கொடுத்து அறிவழகன் இயக்கி வருகிகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான ‘வா டீல்’ விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - டைட்டில் வீடியோ


;