கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துரிதமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் பாடல் ஒன்றை விரைவில் படமாக்கவிருக்கிறார்களாம்.
இன்னொருபுறம் கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. இப்படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் 2 வாரங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறிய இடைவெளி விட்டனர். தற்போது 2வது ஷெட்யூலுக்காக துருக்கி சென்று படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்களாம். பாடல் மற்றும் சிற்சில காட்சிகளை இங்கு படமாக்கவிருக்கிறதாம் கௌதம் அன்ட் கோ. இதனால் இந்த வார இறுதியில் தனுஷ், கௌதம் உள்ளிட்ட டீம் துருக்கி பறக்கவிருக்கிறது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...