11-ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக் ட்ரீட்!

11-ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக் ட்ரீட்!

செய்திகள் 5-Apr-2016 10:36 AM IST VRC கருத்துக்கள்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘24’ படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது இறுதிகட்ட வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது. சூர்யாவின் ‘2டி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 11-ஆம் தேதி காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெறவிருக்கிறது. அதே தினம் மாலை ஹைதராபாத்திலுள்ள ஷில்பகலா வேதிகா ஆடிட்டோரியத்தில் ‘24’ தெலுங்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளனர். சூர்யா, விக்ரம் குமார், ஏ.ஆர்.ரஹ்மான், சமந்தா, நித்யா மேனன் என பெரும் கூட்டணி அமைந்துள்ள இப்படத்தை அடுத்த மாதம் (மே) 6ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகிய ‘36 வயதினிலே’, ‘பசங்க-2’ படங்களை தொடர்ந்து இந்நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘24’ ரசிகர்களுக்கு கோடைக்கால விருந்தாக அமையவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;