‘யு டர்ன்’ அடிக்கும் தயாரிப்பாளர் சமந்தா!

‘யு டர்ன்’ அடிக்கும் தயாரிப்பாளர் சமந்தா!

செய்திகள் 5-Apr-2016 10:22 AM IST Chandru கருத்துக்கள்

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்த சமந்தா, ‘பாணா காத்தாடி’ மூலம் சோலோ ஹீரோயினாக அறிமுகமானார். ‘நான் ஈ’ தவிர்த்து சமந்தா நடித்த கதாபாத்திரங்கள் பெரும்பாலும் சாதாரணமானவையே. கடைசியாக நடித்த ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் வில்லி அவதாரம் எடுத்து ரசிகர்களை மிரள வைத்தார். இந்நிலையில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்க வேண்டுமென்ற தன் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றவிருக்கிறார் சமந்தா.

‘லூசியா’ இயக்குனர் பவன்குமார் இயக்கியுள்ள இரண்டாவது கன்னடப் படமான ‘யு டர்ன்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியிருக்கிறார் சமந்தா. கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதையம்சம் கொண்ட இப்படத்தில் சமந்தாவே நாயகியாக நடிக்கவிருக்கிறார். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;