விஷாலுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங்!

விஷாலுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங்!

செய்திகள் 4-Apr-2016 2:54 PM IST VRC கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தின் ஷூட்டிங் தற்போது மிஷ்கின் இயக்கி வரும் ‘சவரக்கத்தி’ படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் துவங்கவிருக்கிறது. ‘துப்பறிவாளன்’ படத்திற்கான கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்திற்கு இசை அமைத்த அரோல் கொரேலி இசை அமைக்கவிருக்கிறர். விஷாலும் ரகுல் ப்ரீத் சிங்கும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’. முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘மருது’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் விரைவில் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;