சிவகார்த்திகேயனுடன் இணையும் நயன்தாரா!

சிவகார்த்திகேயனுடன் இணையும் நயன்தாரா!

செய்திகள் 4-Apr-2016 11:28 AM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிந்து விட்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. ‘24AM Studios’ நிறுவனம் சார்பில் சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. ஏற்கெனவே ஸ்ரீதிவ்யா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் முதலானோரை தனக்கு ஜோடியாக்கிய சிவகார்த்திகேயன் மோகன்ராஜா இயக்கும் படத்தில் நயன்தாராவை ஜோடியாக்கியிருக்கிறார் என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. ‘தனி ஒருவன்’ படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் நயன் தாரா மீண்டும் நடிக்கும் இப்படம், சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;