ஜி.வி.யின் ‘புரூஸ்லீ’க்காக 50 லட்சம் ரூபாய் செட்!

ஜி.வி.யின் ‘புரூஸ்லீ’க்காக 50 லட்சம் ரூபாய் செட்!

செய்திகள் 4-Apr-2016 10:39 AM IST VRC கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பண்டா, ஆனந்த் ராஜ், பாலசரவணன் முதலானோர் நடிக்கும் ‘புரூஸ்லீ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ தயாரிக்கிறது. ஆக்‌ஷன், காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக சென்னை பூந்தமல்லி அருகே பிரம்மாண்ட அரண்மனை செட் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் செல்வில் அமைக்கப்பட்டுள்ள இந்த செட்டில் வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகிற்து. சென்னையில் நடந்து வரும் இந்த படப்பிடிப்பை தொடர்ந்து ‘புரூஸ்லீ’யின் ஷூட்டிங் திருச்சியிலும் நடைபெறவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நகர்வலம் - டீசர்


;