துவங்கியது பாரதிராஜாவின் ‘குற்றபரம்பரை’

துவங்கியது பாரதிராஜாவின் ‘குற்றபரம்பரை’

செய்திகள் 4-Apr-2016 10:03 AM IST VRC கருத்துக்கள்

மனோஜ் கிரியேஷன்ஸ் நிறுவன தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கும் படம் ‘குற்றபரம்பரை’. இந்த படத்தின் துவக்கவிழா நேற்று உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், பாண்டிய ராஜன், பொன்ராம், எழில், எஸ்.எஸ். ஸ்டான்லி, சரவணசுப்பையா, மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் கண்ணன், பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், கபிலன் வைரமுத்து உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிளின் போராட்டத்தை பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகள் தான் இப்படத்தின் மைய கதை. அதனை பாரதிராஜா ‘குற்றபரம்பரை’ என்ற பெயரில் உணர்வுபூர்வமாகவும், உயிரோட்டமாகவும் இயக்கவுள்ளார். இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பினர் கூறியுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;