அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிடித்த படம்! - கார்த்தி

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிடித்த படம்! - கார்த்தி

செய்திகள் 2-Apr-2016 2:43 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா முதலானோர் நடித்து, வம்சி இயக்கிய ‘தோழா’ கடந்த மாதம் 25-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகி, கமர்ஷியலாக பெரும் வெற்றிப் பெற்றிருப்பதோடு. விமர்சன ரீதியாகவும் நன்றாக பேசப்பட்டு வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவிய பத்திரிகையாளர்களுக்கு நண்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று காலை சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கார்த்தி, நாகார்ஜுனா, இயக்குனர் வம்சி, எடிட்டர் பிரவீன், பிவிபி சினிமாஸ் நிறுவனத்தை சேர்ந்த ராஜீவ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கார்த்தி பேசும்போது, ‘‘இப்படத்தில் ஒருவித டென்ஷனோட தான் முதலில் கமிட் ஆனேன்! தெலுங்கு இயக்குனரான வம்சியால் இந்த கதையை தமிழ் நேட்டிவிட்டிக்கு தகுந்த மாதிரி எடுக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் ஷூட்டிங் துவங்கியதும் என்னோட சந்தேகம் தீர்ந்துவிட்டது. தெலுங்கு படத்திற்காக அவர் எழுதி வைத்திருந்த வசனங்கள் அவ்வளவு சூப்பராக இருந்தது. அதற்கு தகுந்தபடி தமிழிலும் வசனங்கள் வரவேண்டும் என்றார். அப்போது தான் என் நண்பர் பரமு மூலம் ராஜுமுருகன் இப்படத்தில் வசனம் எழுத வந்தார். இப்படத்தின் வசனங்கள் பேசப்படுகிறது என்றால் அதற்கு ராஜு முருகனோட உழைப்பும் ஒரு காரணம்.

இப்படத்தின் பத்திரிகையாளர்களுக்கான காட்சி முடிந்ததும் எல்லோரும் கட்டிப்பிடித்து, ‘படம் சூப்பராக இருக்கிறது’ என்று பாராட்டியபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். என்னோட முதல் படத்திற்கு பிறகு இந்த ‘தோழா’வுக்கு தான் இதுபோன்ற ஒரு பாராட்டு கிடைத்தது. உடனே துபாயில் இருந்த நாக் சாருக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னேன். அவரும் ரொம்பவும் சந்தோஷப்பட்டார். படம் வெளியான நாளிலிருந்து, படத்தை பாராட்டி தொடர்ந்து ஃபோன் கால்ஸ். இதற்கெல்லாம் காரணம் பிவிபி சினிமாஸ், இயக்குனர் வம்சி, நாக் சார், மற்றும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களை தந்து ரசிகர்களை சென்றடைய வைத்த ஊடக நண்பர்களும் தான்! எல்லோருக்கும் நன்றி!

என் அம்மா எப்போதுமே நான் நடித்த படங்களை பார்த்து பெரிசா பாராட்டியது கிடையாது. எல்லா படத்திலும் முரடன் மாதிரியே நடிக்கிறேன்னு சொல்லுவார்! ஆனால் ’தோழா’வை பார்த்து, ‘இதில் என் பையனை அப்படியே பார்த்த மாதிரி இருக்கு, நல்லா பண்ணியிருக்கேன்டா’ன்னு சொல்லி வம்சிக்கு ஃபோன் போட்டு கொடுக்க சொன்னார். அதைப் போல அப்பாவுக்கும் ‘தோழா’ ரொம்பவும் பிடித்திருந்ததாக சொன்னார். அப்பா, அம்மா என இரண்டு பேருக்கும் பிடித்த படமாக ‘தோழா’ அமைந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;