ஜெயம் ரவியை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் இயக்குனர்!

ஜெயம் ரவியை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் இயக்குனர்!

செய்திகள் 2-Apr-2016 11:36 AM IST Chandru கருத்துக்கள்

‘மிருதன்’ படம் மூலம் தென்னிந்தியாவின் முதல் ஷோம்பி படத்தை இயக்கியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன், தனது அடுத்த படத்திலும் புதிய முயற்சி ஒன்றை செய்யவிருக்கிறார். ‘மிருதன்’ நாயகன் ஜெயம் ரவியுடன் இரண்டாவது முறையாக சக்தி சௌந்தர் ராஜன் இணையும் இப்படம், விண்வெளி சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை அதிகம் பரிச்சயம் இல்லாத கதைக்களத்தை ஜெயம் ரவி, சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி கையிலெடுத்திருப்பதால் இப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த கெனன்யா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;