தயாரிப்பாளர் அதர்வாவின் ‘செம போத ஆகாத’!

தயாரிப்பாளர் அதர்வாவின் ‘செம போத ஆகாத’!

செய்திகள் 2-Apr-2016 11:16 AM IST Chandru கருத்துக்கள்

7 படங்களில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கும் நடிகர் முரளியின் மகன் அதர்வா, தற்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். ‘கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்’ என பெயரிடப்பட்டிருக்கும் தன் நிறுவனத்தின் முதல் படைப்பில் நாயகனாகவும் அதர்வாவே நடிக்கிறார். ‘பாணா காத்தாடி’ படம் மூலம் தன்னை ஹீரோவாக அறிமுகம் செய்த இயக்குனர் பத்ரி வெங்டேஷிற்கு தன் முதல் தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்து நன்றி செய்திருக்கிறார் அதர்வா.

‘செம போத ஆகாத’ என வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்திலிருக்கும் ‘செம போத ஆகாத’ படத்தின் ஹீரோயின், மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;