மிகப்பெரிய சாதனைக்குத் தயாராகும் தெறி!

மிகப்பெரிய சாதனைக்குத் தயாராகும் தெறி!

செய்திகள் 2-Apr-2016 11:04 AM IST Chandru கருத்துக்கள்

முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என்றாலே ஏதாவது ஒரு வகையில் சாதனை படைத்தக் கொண்டே இருக்கும். அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுவது, அதிக நாட்கள் ஓடுவது, பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிவது, யு டியூப் பார்வையிடல், லைக்ஸில் சாதனைகள் படைப்பது என ரசிகர்களால் பெரிதாக கவனிக்கப்படும். அந்த வகையில் ‘தெறி’ படத்தின் டீஸர் வெளியான முதல்நாளிலிருந்தே பல்வேறு சாதனைகளைத் தகர்த்துள்ளது. குறிப்பாக ‘வேதாளம்’ படம் செய்த லைக்ஸ் சாதனையையும், ‘புலி’ படத்தின் டிரைலருக்குக் கிடைத்த பார்வையிடல் சாதனையையும் முறியடித்தது ‘தெறி’.

பிப்ரவரி 4ஆம் தேதி வெளியான ‘தெறி’ டீஸர் தற்போது 99 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்களையும், 2 லட்சத்து 95 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. அனேகமாக இன்னும் இரண்டொரு நாட்களில் இந்த டீஸர் 1 கோடி பார்வையிடல்களையும், 3 லட்சம் லைக்குகளையும் பெற்றுவிடும். அப்போது, ஷங்கரின் ‘ஐ’ படத்திற்குப் பிறகு ஒரு கோடி பார்வையிடல்களைப் பெற்ற தென்னிந்தியப் படம் என்ற சாதனையை படைக்கும் ‘தெறி’. அதோடு இந்திய அளவில் 3 லட்சம் லைக்குகளை முதல்முறையாகப் பெற்ற டீஸர் என்ற சாதனைக்கும் சொந்தமாகும் தெறி.

மார்ச் 20ஆம் தேதி வெளியான ‘தெறி’ டிரைலர் இதுவரை 68 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்களையும், 2 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்ததக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;