விஜய், பிரபுதேவா, தமன்னா இணையும் படத்தின் தலைப்பு!

விஜய், பிரபுதேவா, தமன்னா இணையும் படத்தின் தலைப்பு!

செய்திகள் 2-Apr-2016 10:49 AM IST Chandru கருத்துக்கள்

நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் பணியாற்றி, நடிகராக மாறி, இயக்குனராக ஜெயித்து பாலிவுட்டிற்குச் சென்ற பிரபுதேவா, ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். பிரபுதேவாவின் தயாரிப்பில், முதல் படத்தை இயக்குபவர் விஜய். ‘இது என்ன மாயம்’ படத்திற்குப் பிறகு விஜய் இயக்கும் இப்படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க, முக்கிய வேடமொன்றில் சோனு சூட் நடிக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு, தமிழில் ‘காந்தா’ எனவும், தெலுங்கில் ‘அபினேற்றி’ (நடிகை என்று பொருள்) எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹிந்தி வெர்ஷனுக்கான தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி 2 டீஸர்


;