‘தெறி’ சென்சார் ரிப்போர்ட்?

‘தெறி’ சென்சார் ரிப்போர்ட்?

செய்திகள் 1-Apr-2016 1:14 PM IST Chandru கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தெறி’ படத்தின் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. ‘தெறி’ ஆல்பத்தில் ஏற்கெனவே 7 பாடல்கள் இடம்பிடித்திருந்தன. இந்நிலையில், படத்தின் இறுதியில் மேலும் ஒரு புதிய பாடலை இணைத்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதோடு ‘தெறி’யின் சென்சார் ரிசல்ட்டும் தற்போது வெளிவந்துள்ளது. குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்றவகையில் படம் உருவாகியிருப்பதால் படத்தில் எந்த காட்சிகளுக்கும் ‘கட்’ சொல்லாமல், யு சான்றிதழ் வழங்கியிருக்கிறதாம் சென்சார் டீம். வரி விலக்கு கிடைக்குமா? இல்லையா? என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்.

ஏப்ரல் 14ஆம் தேதி உலகமெங்கும் ‘தெறி’ வெளியாகும் அதே நாளில், தெலுங்கில் ‘போலீஸோடு’ என்ற பெயரில் தெலுங்கு டப்பிங்காகவும் வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;