‘பென்சில்’ சென்சார் ரிசல்ட், ரிலீஸ் தேதி?

‘பென்சில்’ சென்சார் ரிசல்ட், ரிலீஸ் தேதி?

செய்திகள் 1-Apr-2016 10:25 AM IST Chandru கருத்துக்கள்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நாயகனாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் ‘பென்சில்’. ஆனால், சிற்சில காரணங்களால் அப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே செல்ல, அவரின் அறிமுகப் படமாக வெளிவந்தது ‘டார்லிங்’. 2013ஆம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்ட ‘பென்சில்’ படம் ஒருவழியாக இந்த ஏப்ரல் மாதம் ரிலீஸாகவிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் ‘பென்சில்’ படத்தை மணி நாகராஜ் இயக்கியுள்ளார். கல்சன் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கும் நாயகன் ஜி.வி.யே இசையமைத்துள்ளார். பாடல்கள், டிரைலர் ஆகியவை பல மாதங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டன. இந்நிலையில், இப்படத்தின் சென்சார் ரில்சட்டும் வெளிவந்துள்ளது. ரொமான்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;