‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ பிரம்மாண்ட ரிலீஸ்!

‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ பிரம்மாண்ட ரிலீஸ்!

செய்திகள் 31-Mar-2016 1:49 PM IST VRC கருத்துக்கள்

‘அவ்னி மூவீஸ்’ சார்பில் இயக்குநர் சுந்தர்.சி முதன் முதலாக தயாரித்திருக்கும் படம்
‘ஹலோ நான் பேய் பேசுறேன்‘. நாளை (ஏப்ரல்-1) ரிலீசாகவிருக்கிற இப்படத்தில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, விடிவி.கணேஷ், கருணாகரன், சிங்கம்புலி, சிங்கப்பூர் தீபன் முதலானோர் நடித்துள்ளனர். ‘நாளைய இயக்குனர்’ புகழ் இயக்குநர் பாஸ்கர் இயக்கியுள்ளார். சுந்தர்.சி. இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘அரண்மனை’, ‘அரண்மனை-2’ படங்களின் வரிசையில் இந்த படமும் ஹாரர், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு கணிசமான வரவேற்பு கிடைத்திருப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பும் இரு மடங்காகி உள்ளது. சுந்தர்.சி.இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அரண்மனை-2’ படத்தை வாங்கி வெளியிட்ட ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ தான் சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தையும் வெளியிடுகிறது. ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ நாளை உலகம் முழுக்க 250-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நட்பே துணை ட்ரைலர்


;