தியேட்டருக்கு வரும் சேரனின் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’

தியேட்டருக்கு வரும் சேரனின் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’

செய்திகள் 31-Mar-2016 12:14 PM IST VRC கருத்துக்கள்

சேரன் இயக்கத்தில் உருவான 10-வது படம் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’. தனது ‘ட்ரீம் தியேட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்து இயக்கிய இப்படத்தில் சர்வானந்த், நித்யா மேனன் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் சந்தானம், பிரகாஷ் ராஜ், ஜெயபிரகாஷ், மனோபாலா, கிட்டி ஆகியோரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்., இந்த திரைப்படத்தை சேரன் தனது புதிய முயற்சியான ‘C2H’ நிறுவனம் துவங்கி, அதன் மூலம் DVD களாக வெளியிட்டார். அப்போது இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. DVD-கள் மூலம் இப்படத்தை பார்த்த பலர், ‘இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தார்ல் இப்படத்தை மேலும் ரசித்திருக்கலாம் என்றும், தியேட்டர்களில் வெளியாவதன் மூலம் இப்படத்திற்கு மேலும் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும்’ என்றும் கருத்துக்களை தெரிவித்திருந்தார்களாம். அத்துடன் நிறைய பேர் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆவலாய் இருப்பதாகவும் சொன்னார்களாம். இதை கருத்தில் கொண்டு சேரன் இந்த படத்தை வருகிற 14-ஆம் தேதி தமிழகம் முழுக்க வெளியிட முடிவு செய்து, அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

C2H பற்றி சினிமா பிரபலங்கள் - வீடியோ


;