‘தெறி’யை தொடர்ந்து வெளியாகும் ஜி.வி.யின் ‘மீண்டும் ஒரு காதல் கதை’

‘தெறி’யை தொடர்ந்து வெளியாகும் ஜி.வி.யின் ‘மீண்டும் ஒரு காதல் கதை’

செய்திகள் 31-Mar-2016 11:15 AM IST VRC கருத்துக்கள்

அறிமுக நடிகர் வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார் ஜோடியாக நடித்துள்ள படம் ‘மீண்டும் ஒரு காதல் கதை’. SVD ஜெயச்சந்திரன் தயாரிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கியிருக்கும் இப்படம் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘தட்டத்தின் மறையத்து’ படத்தின் ரீ-மேக் ஆகும். மலையாளத்தில் ஹீரோயினாக நடித்த இஷா தல்வரே தமிழிலும் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ஜி.வி. இசை அமைப்பில் வெளியாகும் 51-ஆவது படம் இது. ஏற்கெனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக்கை நாளை (ஏப்ரல்-1) வெளியிடவிருக்கிறார்கள். பாடலாசிரியர் அருண் காமராஜ் எழுதியுள்ள ‘மை போட்டு… மை போட்டு…’ என்று துவங்கும் இந்த பாடல் படத்தில் திருமண நிகழ்ச்சியின்போது பாடப்படும் பாடலாக அமைந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கும் தனது 50ஆவது படமான ‘தெறி’ வருகிற 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘மீண்டும் ஒரு காதல் கதை’யும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;