ஷாமின் ‘காவியன்’

ஷாமின் ‘காவியன்’

செய்திகள் 31-Mar-2016 10:52 AM IST VRC கருத்துக்கள்

ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா முதலோனார் நடித்திருக்கும் ‘ஒரு மெல்லிய கோடு’ திரைப்படம் நாளை (ஏப்ரல்-1) வெளியாகவிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸை திடீரென்று வருகிற 8-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் ரிலீஸை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் ஷாம் அடுத்து சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார். சாரதி என்ற அறிமுக இயக்குனர் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு ‘காவியன்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ஷாம் ஏற்கெனவே ‘6’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இது குறித்து ஷாம் கூறும்போது, ‘‘நான் தயாரித்து நடித்த ‘6 படம் எனக்கு லாபத்தை தந்ததோ இல்லையோ நிறைய அனுபவங்களை தந்தது. அந்த அனுபவங்களை வைத்து அடுத்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளேன்’’ என்றார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி அனிமல் கேங் -1 டீஸர்


;