‘ஜிகர்தண்டா’ வெளிவந்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படமான ‘இறைவி’யின் பாடல், டிரைலர் வெளியீட்டிற்கான வேலைகள் பிஸியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவரியா, கருணாகரன், ராதாரவி என பெரிய நட்சத்திரப்பட்டாளங்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாடல்களை ஏப்ரல் 2வது வாரத்தில் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள இறைவி டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து டிரைலரையும் வெளியிடுவதற்கான வேலைகளும் நடைபெறுகின்றன.
ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி அன்ட் அபி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் ‘இறைவி’ படத்தை மே முதல் வாரத்தில் வெளியிட வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம்...