அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தெறி’யின் கேரள விநியோக உரிமையை நடிகர் பிருத்திவிராஜின் ‘ஆகஸ்ட் சினிமாஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது என்ற செய்தியை நமது இணையதளத்தில் நேற்று வெளியிட்டிருந்தோம். ஆனால் அது தவறான தகவல் என்றும், ‘தெறி’யின் கேரள உரிமையை கைபற்றியிருப்பது நடிகையும், திரைப்பட தயாரிப்பாளருமான சாந்த்ரா தாமஸ் மற்றும் விஜய்பாபு ஆகியோரின் ‘ஃபிரைடே ஃபிலிம்ஸ்’ மற்றும் ‘கார்ணிவல் பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் தான் என்ற அதிகாரபூர்வமான தகவல் கிடைத்துள்ளது. இந்த நிறுவனம் ‘தெறி’க்காக 5.6 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக ‘தெறி’யின் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணுவை நடிகை சாந்த்ரா தாமஸும், விஜய்பாபுவும் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி தான் மலையாள புத்தாண்டு பண்டிகையான விஷுவும் வருகிறது. அதனால் விஜய்யின் ‘தெறி’யை கேரளாவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...