‘தெறி’க்கு புதிய டைட்டில்!

‘தெறி’க்கு புதிய டைட்டில்!

செய்திகள் 30-Mar-2016 10:39 AM IST Chandru கருத்துக்கள்

‘தெறி’ படத்தின் முக்கிய வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, படம் சென்சார் கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் படத்தின் சென்சார் சான்றிதழ் என்ன என்பது தெரிந்துவிடும். அதோடு, ‘தெறி’யை தமிழகமெங்கும் அதிக திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வேலைகளும் இன்னொருபுறம் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், ‘தெறி’ படத்தின் தெலுங்கு டப்பிங் படத்திற்கு ‘போலீஸோடு’ (போலீஸ்காரன்) என்ற டைட்டிலை சூட்டியிருக்கிறார்கள்.

‘போலீஸோடு’ படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை தில் ராஜு வாங்கியிருக்கிறார். இன்று மாலைக்குள் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தெறி மற்றும் போலீஸோடு உலகமெங்கும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;