ரமீஸ் ராஜாவின் ‘டார்லிங்-2’ அனுவபம்!

ரமீஸ் ராஜாவின் ‘டார்லிங்-2’ அனுவபம்!

செய்திகள் 30-Mar-2016 10:35 AM IST VRC கருத்துக்கள்

நாளை மறுநாள் (ஏப்ரல்-1) வெளியாகவிருக்கிறது ‘டார்லிங்-2'. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ரமீஸ் ராஜா 'டார்லிங் 2' படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறும்போது,

"பள்ளி நாட்களிலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி நடிப்பின் மேல் நான் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தேன். அந்த ஆர்வமே எனக்கு சில குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்று தந்தது. அந்த காலகட்டத்தில் தான், ஸ்டன்ட் மாஸ்டர் ‘பில்லா’ ஜெகன் மூலமாக நான் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் அவர்களை சந்தித்தேன். அவருடனான சந்திப்புகளில் 'டார்லிங் 2' கதைக்குள் ஆழமாக இணைந்துவிட்டோம் . அதனை தொடர்ந்து, நடிப்பின் நுணுக்கத்தை நன்கு அறிய சில மாதங்கள் பயிற்சியும் மேற்கொண்டேன். பொதுவாக புதுமுகத்திற்கு, சினிமா துறையில் பெரிய அளவில் ஒத்துழைப்பு இருக்காத நிலையில் இந்த படத்தில் என்னுடன் பயணித்த அனைவரும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார்கள்.

மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா அவர்கள், வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களை மதித்து ஆதரவு தரக் கூடியவர். அனைத்து ரசிகர்களுக்குமான ஒரு படமாக ‘டார்லிங்-2’ அமைந்துள்ளது. இந்த படம் தமிழ் சினிமாவில் எனக்கு நல்ல ஒரு இடத்தை பெற்று தரும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெஹந்தி சர்க்கஸ் - ட்ரைலர்


;