டெல்லியில் அக்ஷய்குமாருடன் மோதும் சூப்பர்ஸ்டார்?

டெல்லியில் அக்ஷய்குமாருடன் மோதும் சூப்பர்ஸ்டார்?

செய்திகள் 30-Mar-2016 10:22 AM IST Chandru கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் பரபரப்பாக உருவாகி வரும் எந்திரன் 2ஆம் பாகத்தின் (2.0) படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் அக்ஷய்குமார் வித்தியாசமான தோற்றத்தில் டெல்லி படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டது. படத்தின் ஹீரோ ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், அவரின் உடல்நிலை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதையடுத்து கடந்த திங்கள் கிழமை இரவு அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில், 2.0 படத்தின் 3வது ஷெட்யூல், சண்டை இயக்குனர் கென்னி பேட்ஸின் (டிரான்ஸ்ஃபார்மர் புகழ்) தலைமையில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கலைஞர்களும் கென்னி பேட்ஸுடன் இணைந்து பரபரப்பாக வேலை செய்துகொண்டிருக்கிறார்களாம். ரஜினிக்கும், அக்ஷய்குமாருக்குமிடையே நடக்கும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. டெல்லியைத் தொடர்ந்து மொராக்கோ செல்லவும் திட்டமிட்டிருக்கிறதாம் 2.0 டீம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;